நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் சாத்தியம்?

பொது மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் இன்று அல்லது நாளை பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடகளை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

இதன்படி புதிய கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு உத்தரவு குறித்த தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் நாட்டினை முடக்காத பட்சத்தில் நாளாந்தம் 200 கொரோனா மரணங்கள் பதிவாவதற்கும் நாளாந்தம் 5 ஆயிரம் தெற்றாளர்கள் வரை அடையாளங் காண்ப்படும் சாத்தியமுள்ளதாக வைத்தியர்கள் எதிர்வு கூறியுள்ளதாக குறித்த. செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!