பிரித்தானிய அமைச்சரின் சிறிலங்கா பயணம் ரத்து

பிரித்தானியாவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக அமைச்சர் அலோக் சர்மா சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.

பிரித்தானியாவில் திடீர் பொதுத்தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டதை அடுத்து, அலோக் சர்மாவின் சிறிலங்கா பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் இன்று அறிவித்துள்ளது.

நாளை தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை வரை அவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவும், சிறிலங்கா அரசதரப்புடன் பேச்சுக்களை நடத்தவும் அலோக் சர்மா திட்டமிட்டிருந்தார்.

Tags: , ,