வேலைக்காரப் பெண்னை மணப் பெண்ணாக்கி அழகு பார்த்த சவுதி குடும்பம்!

சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் அண்மையில் தனது வீட்டிலே கத்தாம்மாவாக (வேலைக்கார பெண்ணாக) பணிபுரிந்த ஆசிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அதே நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் சவுதி குடும்பம் ஒன்று பிரமான்டமான முறையில் முழுச் செலவையும் பொறுப்பேற்று திருமணம் நடாத்தி வைத்து ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அது மாத்திரமல்ல மணமக்களின் தேன்நிலவுக்கான ஏற்பாடுகளையும் செய்து அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.

குறித்த திருமண நிகழ்வுக்கு தங்களது குடும்ப உற்றார் உறவுகளையும் அழைத்ததோடு மாத்திரமல்லாது வேலைக்கார பெண்ணின் நண்பர்கள், உறவுகளையும் அழைத்து திருமணத்தில் பங்கேற்கச் செய்துள்ளார்கள். சவுதி அரேபியாவில் தனது வீட்டில் வேலை பார்க்கும் சாரதி மற்றும் ஹவுஸ் மெயிட்களை தாக்கி கொடுமைப்படுத்துகின்றவர்களுக்கு மத்தியில் இத்தகைய நல்லவர்களின் முயற்சிகள் அனைவருக்கும் முன்மாதிரி என சவுதி நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அச் சவுதி குடும்பத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.

Tags: