திருகோணமலையில் 33 ஆயிரம் ஏக்கர் நிலம் அமெரிக்காவுக்கா?

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீடுக்காக அமெரிக்க நிறுவமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல்களை முழுமையாக நிராகரிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில்’ திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீடுக்காக அமெரிக்க நிறுவமொன்றுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை ‘ தொடர்பில் வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த கருத்தினை அவர் முழுமையாக நிராகரித்துள்ளார். அவ்வாறு எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!