கோவிட் பணிக்குழு தொடர்பில் ரணில் கூறிய கருத்து சரியானது – ராஜித சேனாரத்ன

கோவிட் பணிக்குழு தோல்வியடைந்துள்ளது என்று, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியது சரியானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கோவிட் பணிக்குழு தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறியதால், அது தோல்வியடைந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோவிட் பணிக்குழு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கியது.

ஆனால் அவர்களுக்கு அதில் கருத்து கூற வாய்ப்பில்லை. இந்த பணிக்குழுவில் அரசியல் தலைமை மட்டுமே முடிவுகளை எடுக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!