ஈஸ்டர் தாக்குதல் – 25 பேருக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட, சதி, தயாரிப்பு, உதவி மற்றும் ஊக்குவித்தல், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை சேகரித்தல், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளை விசாரித்து தீர்ப்பளிக்கவே தீர்ப்பாயம் அமைக்குமாறு பிரதம நீதியரசரை சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் , புனித செபஸ்டியன் தேவாலயம், கிங்ஸ்பரி ஹோட்டல், ஷங்கரிலா கொழும்பு, சினமன் கிராண்ட் கொழும்பு, மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் ட்ரொபிக்கல் இன் (தெஹிவளை) ஆகிய எட்டு தாக்குதல்கள் தொடர்பாகவே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!