முடக்கமா?- ஊரடங்கா? பயணத்தடையா? – இன்று முடிவு!

நாட்டில் மீண்டும் பொது முடக்கத்தை அமுல்படுத்துவதா? அல்லது கொவிட் பரவலுக்கு மத்தியில் அடுத்த கட்ட தீர்மானம் என்ன என்பது பற்றி இன்று இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை விசேட பேச்சுவார்த்தை ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்தது. இதில் மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி சந்திப்பில் நாட்டில் தற்போதைய சூழ்நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும், முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!