நிபந்தனை அடிப்படையிலேயே அரசுடன் பேச்சு!

இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனை அடிப்படையிலேயே கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்களை முன்வைக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் எதிர்கொண்டுள்ள சர்வதேச அழுத்தங்களை இல்லாமல் செய்வதற்கான சந்தர்ப்பத்தை இந்தச் சந்திப்பின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி விடக்கூடாது என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுவான கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!