மூன்று மாதத்துக்குள் மீள்குடியேற்றம்! – ஜனாதிபதி உறுதி

வடக்கில் எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடகப் பிரதானிகள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையான காலப்பகுதிக்குள் 60 வீதமான இடம்பெயர்ந்த மக்கள், தமது சொந்தக் காணிகளில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் காணாமல் போனோர் மற்றும் நிலமீட்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் போனோர் தொடர்பில் இதுவரை காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து வழங்கக்கூடிய தீர்வுகளை விரைவாகப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Tags: ,