மே தினத்தில் பலத்தை நிரூபிப்பாராம் மஹிந்த

கூட்டு எதிர்க்கட்சியின் பலத்தை மே தினக் கூட்டத்தில் நிரூபிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். “ கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு காலி முகத்திடல் மைதானத்தை வழங்கியமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த மைதானத்திற்கு அதிகளவான மக்களை அழைத்து எமது பலத்தை நிரூபிப்போம். காலி முகத்திடலில் நடைபெறும் கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்க ஓர் மே தினக் கூட்டமாகும்.

இந்த அரசாங்கம் குறித்து நாட்டு மக்களுக்கு இருந்த அனைத்து எதிர்பார்ப்புக்களும் கரைந்து போயுள்ளன. இம்முறை மே தினம் நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அமையும்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Tags: ,