“வீடு தேடி வரும் எரிபொருள்” – தமிழகத்தில் நடைமுறைக்கு வந்த அதிரடி திட்டம்!

சென்னை அம்பத்தூரில், தொலைபேசி மூலம் புக்கிங் செய்தால் இருப்பிடத்திற்கே சென்று டீசல் விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரத் பெட்ரோலிய நிறுவனம் கூறியதாவது; “சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான மென்பொருள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பணி நேரங்களில் ஜெனரேட்டர் போன்றவற்றிற்கு டீசல் தீர்ந்துவிட்டால் அங்கு பணிபுரிவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதேபோல, இரவு நேரங்களில் கனரக வாகனங்களில் டீசல் தீர்ந்து அவைகள் நடு வழியில் நின்றுவிட்டால், வாகனங்களில் உள்ள சரக்குகளை குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டுபோய் சேர்க்க முடியாமல் அதன் ஓட்டுநர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

இதுபோன்ற காலகட்டங்களில் டீசல் தேவைப்படும் நபர்கள் தங்களின் இருப்பிடம் போன்றவற்றை போன் மூலம் பதிவு செய்தால் தேவைக்கேற்ப டீசல் வாகனங்களில் எடுத்துச் சென்று தரப்படும். சுமார் 6,000 லிட்டர் வரை இந்த பங்கில் இருந்து இலவசமாக இருப்பிடத்திற்கு சென்று வழங்கப்படும்.

5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 20 முதல் 6,000 லிட்டர் வரை தேவையான டீசல் இங்கிருந்து விநியோகிக்கப்படவுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் அனைத்தையும் சேர்ந்து சுமார் 25 பெட்ரோல் பங்குகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!