மதுரை ஆதினமாக இருந்த அருணகிரி நாதர் உடல்நலக்குறைவால் மரணம்!

மதுரை ஆதினமாக இருந்த அருணகிரி நாதர் மறைவைத் தொடர்ந்து புதிய ஆதினம் யார் என்பது உத்தியோகப்பூர்வமாக முடிவு செய்யப்படுள்ளது. மதுரை ஆதீன மடம் தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

இன்று வரை 292 பேர் பீடாதிபதியாக பொறுப்பு வகித்துள்ளனர். 292 ஆவது பீடாதிபதியாக 1980ம் ஆண்டு குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (அருணகிரி) என்பவர் ஆதீனமாக பொறுப்பேற்றார்.

77 வயதான இவர் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக இருந்துவந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 8ம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று காலை முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடம் ஆனதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவிந்திருந்தது.

இந்நிலையில், இன்று இரவு சிகிச்சை பலனின்றி மதுரை ஆதினம் காலமானார். அதனையடுத்து, அடுத்த ஆதினம் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளுக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என மதுரை ஆதினத்தம் அருணகிரி நாதரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அவர் இளைய ஆதீனமாக உள்ளார்.

அவர், 293-வது மதுரை ஆதினமாக நியமிக்கப்படவுள்ளார். நாளை மதியம் தருமபுர ஆதீனம், திருவாடுதுறை ஆதினம், கோவை காமாட்சிபுரி ஆதினம் உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற ஆதீனங்கள்,

மதுரையில் 293வது ஆதீனமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்வித்து நியமனம் செய்வார்கள் எனவும்

அதனை தொடர்ந்து 292 மதுரை ஆதீனமான மறைந்த அருணகிரி நாதரின் உடலுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்த பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்ய உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!