இலங்கையில் குறைந்த கோவிட் தொற்றாளர் எண்ணிக்கையின் பின்னணியில் உள்ள நபர் குறித்து குற்றச்சாட்டு

கோவிட் இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்து குறைந்த எண்ணிக்கை வெளியிடும் விடயத்துக்கு பின்னால், ஒரு இராணுவ அதிகாரி இருப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் “மேஜர் ஜெனரல்” ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த மேஜர் ஜெனரலே, கோவிட் வைரஸால் இறந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கைக்கு மாறாக குறைந்த எண்களை வழங்கியதாக ராஜித தெரிவித்துள்ளார்.

கோவிட் மூலம் இறந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வுக்கு இதுவே காரணம் என்று சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த, விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!