20,000 ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க பிரித்தானிய அரசு முடிவு!

தாலிபான்களிடமிருந்து தப்பித்து வெளியேறும் சுமார் 20,000 ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு வரவிருக்கும் ஆண்டுகளில் பிரித்தானியாவில் அடைக்கலம் கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், இந்த ஆண்டு வெறும் 5,000 பேரை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தாலிபான்களிலிருந்து தப்பி வெளியேறும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி செய்வதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவிற்காக பணிபுரிந்த மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

மேலும், துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தலிபான்கள் 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் அடிமைகளாகக் குறிவைத்து வருவதாகக் கொடூரமான தகவல்கள் கூறுகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 5,000 ஆப்கானியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த ஆண்டு பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், விமர்சகர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர், பிரதமர் போரிஸ் ஜான்சன் தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!