தடுப்பூசிகளுக்கு எதிர்வினையை வெளிப்படுத்தும் புதுவகை கொவிட் திரிபு உருவாகுவதாக எச்சரிக்கை!

நாட்டில் தற்போது வழங்கப்பட்டு வரும் தடுப்பூசிகளுக்கு, எதிர்வினையை வெளிப்படுத்தும் புதிய வகை கொவிட் திரிபொன்று உருவாகுவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த வருட இறுதியில் கொவிட் தொற்றுக்கு மத்தியில், அபாயகரமான நிலைமையொன்றை சந்திக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை மேற்கோள்காட்டி, சிங்கள நாளிதலொன்று, இன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இலங்கை நான்காவது அபாய மட்டத்தில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த நிலைமையினை கருத்திற் கொண்டு, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், வைத்தியர் செனால் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளதாக, குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!