எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் – தேசிய பெற்றோல் ஊழியர்கள் சங்கம் தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பெற்றோல் ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் எதிர்வரும் 11 நாட்களுக்கு போதுமான டீசல் மாத்திரமே காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 10 நாட்களுக்கு போதுமான அளவு பெற்றோல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளொன்றுக்கு மூவாயிரம் மெற்றிக்டொன் பெற்றோல் தேவை எனவும் தற்போதைய நிலையில் 32 ஆயிரம் மெற்றிக்டொன் பெற்றோல் மாத்திரமே இருப்பில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் உடனடியாக எரிபொருள் கொள்வனவுக்கான விலைமனு கோரப்பட்டதாகவும், ஆனால் அதற்கான நிறுவனம் நடவடிக்கை எதுவும் முன்னெடுக்க வில்லை என கூறப்படுகிறது.

குறிப்பாக, 350 மில்லியன் டொலர் நிதி செலுத்தப்பட்டால் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.

எனவே எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை விரைவில் ஏற்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளைடொலர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அதனால் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் தெரித்திருந்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அமைச்சின் நிதியை பயன்படுத்தி அமைச்சர் கட்டிடமொன்றை நிர்மானிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இதற்கென 25 குளிரூட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய பெற்றோல் ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!