தலிபான்களை அங்கீகரிக்க கூடாது!

இலங்கை அரசாங்கம் தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்க கூடாது. காபூலில் உள்ள இலங்கை தூதரகத்தை உடனடியாக மூட வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜிகாத், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் மய்யமாக ஆப்கானிஸ்தான் மாறும் என்பதால், இலங்கை அரசாங்கம் ஆப்கானிஸ்தான் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தலிபான்களின் கடந்தக் கால ஆட்சியின்போது ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் மய்யமாக மாறியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள ரணில், ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியுடன் இராஜதந்திர செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால், இலங்கையிலும் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!