அமெரிக்காவுடன் தாலிபான்கள் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம்: கசிந்த முக்கிய தகவல்!

அமெரிக்க தனது படைகளை திரும்பப் பெறும் வரை தலிபான்கள் அரசு பற்றிய முடிவுகளை எடுக்க மாட்டார்கள் என ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடியதை அடுத்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

எனினும், இதுவரை தலைமை குறித்தோ, அரசாங்கம் குறித்தோ தலிபான்கள் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவில்லை.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த ஐந்து நாட்கள் ஆகியும், ஆப்கானிய தேசிய பாதுகாப்புப் படைகளை மாற்றுவதற்கான திட்டங்களை தலிபான்கள் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் ஆலோசனை நடைபெற்று வருதவதாக தலிபான்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானில் உள்ள தனது படைகளை அமெரிக்க திரும்பப் பெறும் திகதி (ஆகஸ்ட் 31) முடியும் வரை தலிபான்கள் அதன் தலைமை பற்றி எதையும் அறிவிக்கத் திட்டமிடவில்லை என்று ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதேசமயம், அமெரிக்க தனது படைகளை திரும்பப் பெறும் இறுதி திகதி முடியும் வரை ‘எதுவும் செய்யக்கூடாது’ என்று அமெரிக்காவுடன் போராளிகள் குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தலிபானின் முன்னணி பேச்சுவார்த்தையாளர் அனஸ் ஹக்கானி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘எதுவும் செய்யக்கூடாது’ என்ற குறிப்பு அரசியல் துறையில் மட்டுமா என்பதை அனஸ் ஹக்கானி விளக்கவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!