தனிமைப்படுத்தல் ஊரடங்கில் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அன்றாட வாழ்வாதாம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நிவாரண கொடுப்பனவ வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மாவட்ட செயலாளர்கள் ஊடாக குறித்த நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ் ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்

இதேவேளை 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என் எச் சித்ரானந்த மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்

இதனிடையே நாட்டில் முன்னதாக முடக்க செயற்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் வாழ்வாதார பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!