நான்கு மாதங்களுக்கு மேல் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் இது உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் முதல் மற்றும் இரண்டாவது அளவுகள், இந்த பரிசோதனைக்குப் பயன்படுத்தப்பட்டன.
இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது மற்றும் கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றது என்று பேராசிரியர் தொடம்பஹல தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திய இரண்டு மாதங்களுக்குப் பின்னர் உடலில் பிறப்பொருள் எதிரிகள் உருவாவது சோதனைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, இலங்கையில் உள்ள மக்களுக்கு கொவிஷியல்ட் தடுப்பூசிகளை வழங்குவது மிகவும் பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!