வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் நிவாரண கொடுப்பனவு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இன்று முதல் 2 ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இன்று முதல் மாவட்ட செயலாளர்கள் ஊடாக குறித்த நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ் ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என் எச் சித்ரானந்த மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த உதவித் தொகையினை முறைகேடுகள் இன்றி வழங்கிவைக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான பெயர்பட்டியில் பிரதேச செயலாளர்களினால் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அன்றாட வாழ்வாதராம் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்ட மக்களுக்கும் உதவித் தொகையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!