ஊரடங்குச் சட்டத்தை மீறிய 502 பேர் 24 மணிநேரத்தில் கைது!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய 502 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56 ஆயிரத்து 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல்மாகாண எல்லைப் பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 13 சோதனைச் சாவடிகளில் 757 வாகனங்களும், 1,509 நபர்களும் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!