ஆணாக மாறிய பெண்: வேறொரு பெண்ணை போராடி கரம்பிடித்த சம்பவம்!

சென்னையை சார்ந்தவர் கவின் தமிழ். இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார். இந்த மனுவில், ” நான் பிறக்கையில் பெண்ணாக பிறந்தேன். பெற்றோர்கள் எனக்கு லாவண்யா என பெயரிட்ட நிலையில், நாளடைவில் நான் ஆணாக உணர்ந்து மருத்துவரின் ஆலோசனைப்படி ஹார்மோன் தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆணாகவே மாறிவிட்டேன். இதன்பின்னர், எனக்கு பெயர் கவின் தமிழ் என பதிவு செய்து மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 2018 ஆம் வருடம் கடலாடி பகுதியை சார்ந்த ரேவதி என்ற பெண்ணை காதலித்தேன். தற்போது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், எங்களது காதலுக்கு ரேவதியின் வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 27 ஆம் தேதி ரேவதியும் என்னுடன் வெளியேறினார். ரேவதி பல்லாவரம் அருகேயுள்ள கீழ்கட்டளை பகுதியில் செயல்படும் பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார்.

பின்னர், கடந்த 8 ஆம் தேதி காவல் துறையினருடன் வந்த ரேவதியின் பெற்றோர், வலுக்கட்டாயமாக அவரை அழைத்து சென்றுவிட்டனர். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், ரேவதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் ரேவதி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இருதரப்பு வாதங்கள் குறித்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ” கடந்த 3 வருடமாக கவின் தமிழும் – ரேவதியும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

கவித பெண்ணாக இருந்து ஆணாக மாறியுள்ளதை தெரிந்தும், ரேவதி அவரை காதலித்து வாழ்ந்து இருக்கிறார். மேலும், அவருடனே வாழ விருப்பம் தெரிவிக்கிறார். காதல் ஜோடிகளின் மனதில் உள்ள ஆசைக்கு தடையேதும் விதிக்க முடியாது. அவர்கள் சேர்ந்து வாழ நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது ” என்று தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!