விஞ்ஞான ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவில்லை – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

நாட்டில் தொற்றைக்கட்டுப்பதும் வகையில், விஞ்ஞான ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது அமுலில் உள்ள ஒருவாரகால ஊரடங்கின் ஊடாக தொற்றை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, zoom தொழிநுற்பத்தின் ஊடாகவேனும் அமைச்சரவை கூட்டம் இடம்பெறுமானால், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடி தீர்மானங்களை பெறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை குறித்த தமது கருத்துகளை வெளிப்படுத்தும் பலம் அமைச்சர்களுக்கு இருக்க வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

அமைச்சரவையில் இல்லாது வேறுவழிகளில் அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்துவது, அமைச்சரவையில் கருத்துகளை முன்வைப்பதில் அச்சம் கொண்டுள்ளனர் என்பதை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு இல்லையாயின், அமைச்சரவையில் கருத்துகளை தெரிவித்து, ஜனநாயக ரீதியில் தீர்மானங்களை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் அமைச்சரவையில் இல்லை என்பதை காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!