எல்லை மீறும் தாலிபான்கள்: ஒரே வாரத்தில் 200 பேர் கொன்று குவிப்பு!

ஆப்ரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளால் அப்பாவி மக்கள் 200 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7 மாதங்களில் மட்டும் ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளால் நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோவில் முன்னெடுத்த தாக்குதல்களில் 700 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மட்டுமின்றி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 200 பேர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சாஹல் பகுதியில் இருந்து மட்டும் 7 மில்லியன் மக்கள் வெளியேறியுள்ளனர்.

ஆப்ரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் வளர்ச்சி என்பது ஐராப்பாவுக்கு அச்சுறுத்தலாக மாறும் எனவும், குறிப்பாக பிரித்தானியாவுக்கு அந்த பாதிப்பு இருக்கும் என்றே கூறப்படுகிறது.

அமெரிக்க துருப்புகள் கைவிட்டு சென்ற ஆயுதங்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்ரிக்காவுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் வெற்றியானது உலகம் முழுமையும் உள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு புத்துணர்வை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்ரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதிகள் அசுர வளர்ச்சியடைந்து வருவதாகவும் காலநிலை நெருக்கடி மற்றும் ஜனநாயக வீழ்ச்சியும் நிலைமையை மிகவும் மோசமாக்கியுள்ளது என தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் மாதம், மொசாம்பிக்கின் முக்கிய தொழில் நகரமான பால்மாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டு எண்ணெய் தொழிலாளர்கள் உட்பட டசின் கணக்கான அப்பாவி மக்களை இரக்கமின்றி கொன்றுள்ளனர்.

ஆப்ரிக்கா தற்போது தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. நைஜர், நைஜீரியா மற்றும் கேமரூன் எல்லையான சாட் ஏரி பகுதியானது இஸ்லாமிய தீவிரவாதிகளின் வன்முறைக்கு இலக்காகியுள்ளது, அதே வேளை சோமாலியா, மொசாம்பிக் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு ஆகிய நாடுகளும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை எதிர்கொண்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!