நாட்டின் ஒக்ஸிஜன் தேவை குறித்து விசேட கவனம் செலுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை

இலங்கைக்கு தற்போது ஒக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து விசேட கவனம் செலுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள நடமாடும் ஒக்சிஜன் பிரிவை, இலங்கைக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறும் சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பங்லே ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நடமாடும் ஒக்சிஜன் பிரிவு தற்போது நாட்டுக்கு மிக முக்கியமாக காணப்படுவதாகவும், இதனால் அவற்றை வழங்குவது குறித்து இந்தியா விசேட கவனம் செலுத்தும் என தாம் நம்புவதாகவும் சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் “டொசி” என அழைக்கப்படும் மருந்தினை, இலங்கைக்கு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தற்போது நாட்டில் “டொசி” என அழைக்கப்படும் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!