‘இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்’ – நித்தியானந்தா எச்சரிக்கை!

தலைமறைவாகி இருக்கும் சுவாமி நித்தியானந்தா தன் பக்தர்களுக்கு தினமும் ஆன்லைன் மூலம் நேரலையில் தோன்றி அருளாசி வழங்கி வருகிறார். அதேப்போன்று கடந்த நாளில் இரவு நேரலையில் வந்து அருளாசி வழங்கிய அவர் பக்தர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது மலேசிய பெண் பக்தர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய நித்யானந்தா, இந்தியா, மலேசியா, நேபாளம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குள் யாரும் நுழையாதீர்கள் என எச்சரித்துள்ளார்.

மேலும், என்னுடைய பக்தர்கள் இப்போது எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள். முக்கியமாக இந்தியா, மலேசியா, நேபாளம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருக்கும் என் பக்தர்கள், வேறு நாட்டில் இருந்தால் அங்கேயே இருங்கள்.

முடிந்தால் இங்கே இருப்பவர்கள் வேறெங்காவது செல்லுங்கள். இங்கு பிரளயம் முடிந்து அனைத்தும் அடங்கும் வரை இந்த 4 நாட்டிற்குள்ளும் யாரும் செல்லாதீர்கள்.

நமக்கு முக்கியமானது உயிர், உயிரோடு வாழ்வதே இந்த ஆண்டின் உச்சபட்ச நன்மையும், சுகமும், வரமும்’ எனக் கூறினார்.

இதனையடுத்து, நித்தியானந்தா கூறும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் வைரலாவது வாடிக்கை. இந்தியா செல்ல வேண்டாம் என அவர் கூறிய இந்த வீடியோ பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!