கொழும்பை அச்சுறுத்தும் டெல்டா – நாட்டில் 292 பேருக்கு டெல்டா தொற்று உறுதி.

நாட்டில் டெல்டா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 292 ஆக அதிகரித்துள்ளதென மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஶ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட என்டிஜன் பரிசோதனையூடாக இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு நகரில் டெல்டா வைரஸ் வேகமாக பரவிவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே கொழும்பு நகரில் நூற்றுக்கு நூறு வீதம் டெல்டா மாறுபாடு பரவலடைந்துள்ளதாக ஶ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பீட பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் சுப்பர் டெல்டா மாறுபாடு அச்சநிலைமை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஶ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பீட பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி திட்டம் காரணமாக எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் ஓரளவு சாதமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் நாட்டின் பல மாவட்டங்களில் இன்று டெல்டா மாறுபாடு பரவலடைந்துள்ளதாகவும் ஶ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பீட பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!