யாழ்ப்பாணத்தில் நேற்று மட்டும் 414 தொற்றாளர்கள்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 414 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குடாநாட்டின் பல பகுதிகளில் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனைகளின்போது 364 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பி.சி.ஆர். பரிசோதனைகளின்போது 50 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபட்சமாக சாவகச்சேரியில் 124 பேரும், கரவெட்டியில் 102 பேரும் அடங்குகின்றனர். அதேவேளை, பருத்தித்துறையில் 56 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!