காபூலில் கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் குறித்து வெளியான தகவல்!

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காபூல் விமான நிலையம் அருகாமையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பால் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 170 பேர்கள் பரிதாபமக கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடற்படை மருத்துவராக பணியாற்றி வந்த Maxton Soviak, சிறப்பு ராணுவப் பிரிவை சேர்ந்த Kareem Nikoui, David Lee Espinoza, Hunter Lopez, Rylee McCollum மற்றும் Jared Schmitz ஆகியோர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி ஜோ பைடன், இந்த தாக்குதலை முன்னெடுத்தவர்கள் கண்டிப்பாக பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும்,

தேடி வந்து வேட்டையாடுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதல் போன்று இன்னும் தாக்குதல் நடத்தப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக உளவு அதிகாரிகள் ஜனாதிபதி பைடனுக்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!