அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்காக மத்திய வங்கி 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது

கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இந்த  நடவடிக்கைகளுக்காக இரண்டு அரச வங்கிகளுக்கு குறித்த தொகைப் பணம் வழங்கப்பட்டுள்ள மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொழும்புத் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு மேலும் அதிக பணம் தேவைப்படுமானால் அதனை வழங்குவதற்கும் மத்திய வங்கி  தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!