வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு நள்ளிரவு முதல் புதிய நடைமுறை!

வெளிநாடுகளிலிருந்து இருந்து இலங்கை வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருந்தால், விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு முகம் கொடுக்க தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், அவர்கள் அவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள், புறப்படும் நாடுகளில் செய்து கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், அவர்கள் விமான நிலையங்களிலிருந்து நேரடியாக வெளியேற முடியும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த தளர்வுநேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!