வடமேல் மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடத் தயார் – தயாசிறி ஜயசேகர

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி என்ற ரீதியில் தேர்தலை சந்திக்கும் நிலை காணப்படுமாயின் வடமேல் மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சியின் விருப்பத்துடன் இந்த விடயத்தில் பங்கேற்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பெருமளவான மக்களை ஒன்றிணைத்தோடு, பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த வாய்புகளை மேலும் அதிகரித்து தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!