கோவிட் வைரஸ் என்ற கெட்டகாலம் முடிவுக்கு வந்துள்ளது! மகிழ்ச்சியான தகவலை அறிவித்த பேராசிரியர்

கோவிட் வைரஸ் தொற்று நோய் என்ற கெட்டகாலம் முடிவுக்கு வந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர(Chandima Jeevandara) தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் தனது இளம் பருவத்தை கடந்துள்ளது எனவும் இதனடிப்படையில் தொற்று நோய் நிலைமை படிப்படியாக குறையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மத்திய நிலையத்திற்கு ஆலோசனை வழங்கும் ஆய்வாளர்கள் சிலர் மேற்கொண்ட பரிசோதனையை மேற்கோள்காட்டி ஜீவந்தர இதனை கூறியுள்ளார்.

இந்த பரிசோதனைக்கு அமைய கோவிட் தடுப்பு தடுப்பூசி மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

இதனடிப்படையில், உலக மக்கள் அனைவரும் தமதுபொறுப்பு எனக் கருதி, தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியமானது எனவும் ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!