6 வாரங்களுக்குப் பின் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைவாக,அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத்துக்கான தடை தொடர்ந்து அமுலாகும்.

இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே வெளியே செல்ல முடியும். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைவாக பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க முடியும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!