பிரேசிலில் பயங்கரம்: இரு பெண்களின் மீது தலைகீழாக விழுந்த கார்!

பிரேசிலில் உள்ள ஷோரூமில், இரண்டாவது மாடியில் இருந்து ஒரு கார் கீழே இருந்த இரண்டு பெண்கள் மீது கவிழ்ந்து விழுந்த பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பிரேசிலிய நகரான சாவ் பாலோவின் மையப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை (செப். 27) ஒரு வோக்ஸ்வாகன் கார் ஷோரூமில் இந்தச் சம்பவம் நடந்தது.

அங்கிருந்த சிசிடிவி கமெராவில் இந்த கொடூர விபத்து பதிவாகியுள்ளது. அந்த காட்சியில், சுமார் 20 அடி உயரத்தில் இரண்டாவது மாடியில் இருந்து தரைத்தளத்தில் உள்ள வரவேற்பு மேசைகளின் மீது ஒரு புது கார் கவிழ்ந்து விழுவதை காணமுடிகிறது.

அந்த மேசையில் இரண்டு பெண் வரவேற்பாளர்கள் இருந்தனர். கார் நேரடியாக ஆவார்கள் மீது பொத்தென்று விழுந்தது. மேலிருந்து என்ன வருகிறது என்று பார்க்க அப்பெண்களுக்கு ஒரு நொடி மட்டுமே இருந்தது, அவர்களால் அங்கிருந்து வெளியேறவோ, நகரவோ நேரம் இல்லை.
இதில் 22 வயதான பெண்ணிற்கு உடல் முழுவதும் பல எலும்பு முறிவுகள் உட்பட பலத்த காயங்கள் ஏற்பட்டது. அந்த காரை ஓட்டி வந்த இளைஞருக்கும் காலில் எலும்பு முறிவுடன் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

19 வயதான மற்றோரு பெண் வரவேற்பாளர் உடலில் பல எலும்பு முறிவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், அவர் சில நிமிடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த 29 வயதான பணியாளர் ஓட்டுநர் உரிமம் பெறவில்லை என்பது பின்னர் தெரியவந்தது.

அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அந்த இளைஞர், ஷோரூமில் கார்களை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். அவர் காரை கழுவி விட்டு திரும்பி வந்து இரண்டாவது மாடியில் நிறுத்தி வைத்திருந்த போது அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோரமான விபத்து நடந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!