ஐரோப்பிய நாடொன்றில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட நபர்: பரிசோதனையின்போது மிரண்டு போன மருத்துவர்கள்!

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து கிலோ கணக்கில் உலோகப் பொருட்கள் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட நபர் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். சுமார் 3 மணிநேரம் Klaipeda பல்கலைக்கழக மருத்துவமனையில் அந்த நபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், வயிற்றிலிருந்து கிலோ கணக்கில் இருந்த ஸ்க்ரூ, நட் போன்ற உலோக பொருட்களை அகற்றியுள்ளனர்.

வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட சில பொருள்கள் 10 செண்ட்டி மீட்டர் நீளம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மது குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு அந்த நபர், ஒரு மாதமாக உலோகப் பொருட்களை விழுங்கி வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தனித்துவமான வழக்கு என அறுவை சிகிச்சை நிபுணர் Sarunas Dailidenas கூறினார்.
தற்போது Klaipeda பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள அந்த நபரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!