எண்ணெய் தாங்கிகளை அபகரிக்க முயற்சி!

இந்திய வெளிவிவகார செயலாளர் திருகோணமலைக்கு சென்று எண்ணெய் தாங்கிகளை பரிசோதனை செய்ததன் நோக்கம் மோசடியாக வர்த்தக நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவே என்றும், சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் எத்தியோப்பியாவிற்கு நேர்ந்த நிலைமையே இலங்கைக்கும் நேரிடும் என்றும் ஒமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எஞ்சியுள்ள 85 எண்ணெய் தாங்கிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றே தகவல்கள் கிடைத்துள்ளன. நாட்டின் சொத்துக்களை இவ்வாறு கொள்ளை விலையில் விற்பனை செய்வதற்கு தற்போதைய ஆட்சியாளருக்கு உள்ள உரிமை என்ன?
இந்த நடவடிக்கை மிகப் பெரிய ஓர் பாவச் செயல், தூரநோக்கற்ற எதேச்சாதிகார செயலாகும். தேசிய சொத்துக்கள் கொள்ளையிடப்படுவதற்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும்.

எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அரசாங்கம் இந்த விடயங்களை செவி சாய்ப்பதில்லை. எதிர்காலத்தில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லை என்றே நினைக்கின்றேன் என ஒமல்போ சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!