85,000 பேர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை – காரணம் வெளியானது

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரம் பேர் பல்வேறு காரணங்களினால் எந்தவொரு கொரோனா தடுப்பூசியைய பெற்றுக் கொள்ளாதிருப்பதாக கொவிட் செயலணியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது மிகவும் ஆபத்தான நிலையாகும் என, சுகாதார தரப்பினர் கொவிட் செயலணிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்

இதனை அடுத்து, இவ்வாறான தரப்பினருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட 20 ஆயிரம் பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் விசேட கணக்கெடுப்பொன்றை மேற்கொள்ள கொவிட் செயலணி தீர்மானித்துள்ளது.

அத்துடன், நாடு மீளத் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க பொறிமுறையொன்றை உருவாக்குமாறு சுகாதார தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!