அழகைப் பார்த்து மயங்காதீர்கள்: – ஆண்களே உஷார்

அழகு பொம்மை போல் காட்சியளிக்கும் பெண்கள் தங்கள் மேக் அப்பைக் கலைத்ததும் அடையாளம் தெரியாத அளவு மாறிப்போவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி ஆண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. செயற்கை மூக்கு, ஒட்டுக் கன்னங்கள், போலி புருவங்கள், செயற்கை இமைகள் என பலவகை மேக் அப் சாதனங்களுடன் அழகான சீன பொம்மை போல் காட்சியளிக்கும் பெண்கள் ஒவ்வொன்றாய் தங்கள் மேக் அப்பைக் கலைக்கிறார்கள்.

மேக் அப் முழுவதும் கலைக்கப்பட்ட பிறகு, அவரா இவர் என கேட்கத் தோன்றுகிறது. பல பிரபல ப்ளாக்கர்கள் மேக் அப் இல்லாமல் தாங்கள் எப்படி காட்சியளிப்பார்கள் என இணையத்தில் காட்டியுள்ளனர்.

அவர்களில் ஒருவர், சில பெண்களுக்கு மேக் அப் என்பது தங்களுக்கிருக்கும் உடல் பாகங்களை அழகு படுத்திக் காட்டுவது அல்ல, அதற்கு பதிலாக புதிய பாகங்களை உருவாக்குவதாகும் என்கிறார். வீடியோவைப் பார்க்கும்போது அவர் சொல்வது உண்மைதான் என எண்ணத் தோன்றுவதோடு மேக் அப்பிற்கு பின்னும் மேக் அப்பைக் கலைத்த பின்னும் அவர்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!