மீள் உருவாக்க நடவடிக்கைக்கு தயாராகும் சுதந்திரக் கட்சி

வெற்றிலை சின்னத்துடன் கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் மீள் உருவாக்கம் செய்ய கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்படியான நிலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீள் உருவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
புதிய மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீள் உருவாக்க செய்ய வேண்டும் என்பது தயாசிறி ஜயசேகரவின் அபிப்பிராயமாக இருந்து வருகிறது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைய இது மேற்கொள்ளப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் விரிவான கூட்டணியாக எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தயாசிறி ஜயசேகர இதற்கு முன்னர் சூசகம் வெளியிட்டிருந்தார்.

அத்துடன் கட்சிக்குள் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், தான் தற்போது வகிக்கும் ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் என்ற வகையில் தான் பாரிய வேலைகளை செய்துள்ளதாகவும் வடமேல் மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு தெளிவான தேவை இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!