தன்னை கொன்றுவிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த மூதாட்டி: நெஞ்சை உருக்கும் சம்பவம்!

தமிழகத்தில் 90 வயது மூதாட்டி தன்னைக் கருணைக் கொலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டம் மயிலாடுதுறையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் பட்டா மாறுதல், புதியகுடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் கேட்டு 72 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
அப்போது, 90 வயது மூதாட்டி ஒருவர் தன்னைக் கருணைக் கொலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குத்தாலம் தாலுக்கா வாணாதிராஜபுரத்தை சேர்ந்த தாவூத்பீவி, 90 வயது. இது குறித்து அவர் அளித்த மனுவில், தனது மகன்கள் தனது சொத்தினை பிடுங்கிக்கொண்டு வீட்டைவிட்டு விரட்டி விட்டதாகவும், தனக்கு சொந்தமான வீட்டினை மீட்டுகே கொடுத்தால் அதனை விற்று அந்த வருமானத்தில் தனது இறுதிகாலத்தை கழித்துக்கொள்வதாகவும், இல்லையெனில் தன்னைக் கருணைக் கொலை செய்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை படித்த மாவட்ட ஆட்சியர் லலிதா, தாவூத்பீவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி உரிய தீர்வு பெற்றுத்தருமாறு வருவாய் கோட்டாட்சியர் பாலாஜியிடம் உத்தரவிட்டார்.
பின்னர், இதுகுறித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கூறுகையில் மூதாட்டியின் மற்ற பிள்ளைகளை விசாரணைக்கு வரசொல்லி இருப்பதாகவும், அதுவரை இளையமகன் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கு பேசியுள்ளதாகவும், ஒரிருநாட்களில் விசாரணை நடத்தி மூதாட்டிக்கு பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!