டயானாவை நீக்கியது ஐக்கிய மக்கள் சக்தி!

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கட்சியின் ஒழுக்காற்று குழுவின் தீர்மானத்துக்கு அமைய செயற்குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்தும பண்டார குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பியான டயானா கமகே அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!