தேங்கிக் கிடந்த பால்மா கொள்கலன்கள் விடுவிப்பு!

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருந்த பால்மா உள்ளிட்ட அனைத்து கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால், நேற்று தெரிவித்தார்.

1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பால்மா அடங்கிய கொள்கலன்கள் நேற்று விடுவிக்கப்பட்டதாகவும் அதன்படி அனைத்து கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

துறைமுகத்தில் சிக்கிய அனைத்து கொள்கலன்களையும் விடுவிக்க மத்திய வங்கியிலிருந்து 50 மில்லியன் டொலர் வெளியிடப்பட்டதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வீடியோ தொழில்நுட்பம் மூலம் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!