பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வேண்டும்: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி நான்கு ஆண்டுகள் தொடர வேண்டுமானால் அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வேண்டும் என முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமி கூறியுள்ளார். தருமபுரியில் நடந்த விழா ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.மேலும், கட்சியின் உண்மையான தொண்டர்களும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட அமைச்சர்களும் அதிமுக இணைய வேண்டும் என விரும்புகின்றனர்.

சசிகலாவால் பதவிக்கு வந்தவர்கள் மட்டுமே முரண்பட்டு பேசுகின்றனர், தமிழகத்தில் பினாமி ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது.ஜெயலலிதா விரும்பிய நல்லாட்சி தொடர வேண்டுமானால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக வேண்டும், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்

Tags: