சிறிலங்க துறைமுகங்களின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன அதிபர் வாக்குறுதி

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்து அபிவிருத்தி முயற்சிகளுக்கும் சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.

பீஜிங்கில் நடைபெறும் ஒரு அணை ஒரு பாதை உச்சி மாநாட்டின் பக்க நிகழ்வாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போதே, சீன அதிபர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

‘அனைத்துலக கடல்சார் போக்குவரத்தில் சிறிலங்கா மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.

சீனாவின் கடல்சார் பட்டுப்பாதையில் சிறிலங்கா ஒரு முத்தாக இருப்பதால், அதன் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த துறையின் அபிவிருத்தியை சீனா உறுதிப்படுத்தும்’ என்றும் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

Tags: ,