நள்ளிரவில் எகிறியது எரிவாயு விலை!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,257 ரூபாவாலும், 5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 503 ரூபாவாலும், 2.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 231 ரூபாவாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 520 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லாஃப் கேஸ் நிறுவனமும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியுள்ளது.

12.5 கிலோ சிலிண்டர் ரூ. 984 அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 2840 அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ 393 உயர்த்தப்பட்டு புதிய விலையாக ரூ .1136 அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!