சீனாவை வாட்டும் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய 80 நகரங்கள்!

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷாங்க்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழையால் அங்குள்ள சுமார் 80 நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனிடையே தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஷாங்க்சி மாகாணத்தில் இருந்து சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!