“எரிபொருள் விவகாரத்தில் மத்திய அரசு மாபெரும் தவறை இழைத்துவிட்டது” – சீமான் கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது பெரும் தவறு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தமிழர் வீரக்கலை பாசறையை திறந்து வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கேரளாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு களரி கற்றுக் கொடுப்பது போன்று, தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் தமிழரின் வீர விளையாட்டுகளை கற்றுக் கொடுப்பதை நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தும் என்றார்.

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்ற கொள்கை மத்திய அரசின் கொள்கை முடிவால், அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தாறுமாறாக விலை உயர்ந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

உயிரை காக்கும் மருத்துவத்துறையில் இருந்து, விமானம், துறைமுகம், வங்கி போன்ற அனைத்தும் தனியார் மயமாகி வருவதாகவும், சாலைகள் அனைத்தும் கூறுபோட்டு விற்கப்படுவதாகவும் அவர் சாடினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!