அமெரிக்காவில் பயங்கரம்: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து – இருவர் பலி!

அமெரிக்காவில் வீட்டின் மீது இரட்டை என்ஜின் கொண்ட சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் காலிபோர்னியாவில் இருக்கும் San Diego-வில் இருந்து வடகிழக்கில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இரட்டை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம், அங்கிருந்த வீடுகளின் மீது மோதியதால், குறைந்தது இரண்டு பேர் பலியாகியிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் தீக்கரையாக மாறியுள்ளன. விமான விபத்தின் காரணமாக ஒரு வீட்டில் பரவிய தீ அப்படியே தொடர்ந்து அங்கிருக்கும் வீடுகளில் பரவியுள்ளது.
விபத்து சரியாக உள்ளூர் நேரப்படி 12.15 மணிக்கு நடந்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் San Diego நகருக்கு வடக்கே ஆறு மைல் தொலைவில் உள்ள Montgomery-Gibbs Executive விமான நிலையத்திற்குப் போகும் போது திடீரென கீழே விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று தெரியவில்லை,
உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்று நம்பப்படுகிறது.

மேலும், இந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில் Santana உயர்நிலைப் பள்ளி உள்ளதால், அங்கு மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் குறித்த பள்ளி நிர்வாகம் அனைத்து பள்ளி மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தற்போது குறித்த பகுதிக்கு விரைந்துள்ள தீயணைப்பு படையினரை தீயை அணைக்க போராடி வருகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!